நேரு வீதியில் போக்குவரத்து போலீசார் அதிரடி
புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு போக்குவரத்து போலீசார் நேரு வீதியில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்பட்டது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி நகரப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு கிழக்கு போக்குவரத்து போலீசார் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, முக்கிய வீதியான நேரு வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஏன் என்பதை கண்டறிய போக்குவரத்து போலீசார் திடீர் ஆய்வில் மேற்கொண்டனர்.
இதில் அதிர்ச்சியுட்டும் விதமாக நேரு வீதியில் உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் வாகனங்களே காலை முதல் இரவு வரை கடைகளில் எதிரில் நிற்பது தெரியவந்தது. இதன் காரணமாக, நேரு வீதியில் பொருட்களை வாங்க வரும் பொது மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருவதும், வேறு வழியின்றி வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்திவிட்டு செல்வதும் தெரிந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையில் நேற்று காலை 7:30 மணிக்கு சீனியர் எஸ். பி., திவ்யா, எஸ்.பி., ரச்சினா சிங், இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையில் போக்குவரத்து போலீசார், நேரு வீதியில் உள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பைக்குகளை கண்டறிந்து, அவற்றை பழைய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கட்டண பார்க்கிங்கு இடம் மாற்றம் செய்தனர். இதனால் நேரு வீதி வாகன நெருக்கடி இல்லாமல் விசாலமாக காட்சியளித்தது. போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையால் நேருவீதியில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களும் ஆர்வமுடன் அதிக அளவில் கடைகளுக்கு வருவார்கள் என சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
-
த.வெ.க., கூட்டணி அரசை அடிக்கடி விமர்சிப்பதா? ஜோதிமணி எம்.பி., மீது காங்., நிர்வாகிகள் காட்டம்
-
ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தப்படலாம்; அதிபர் டிரம்ப் சூசகம்
-
போலீஸ் ஏட்டுவின் விஸ்வரூப ஊழல்: ரூ.65 கோடிக்கும் மேல் சொத்து குவிப்பு
-
ரூ.5 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ
-
தேர்தல் நெருங்குவதால் டிரம்ப் பல்டி: கனடா இறக்குமதி மீதான வரிகள் திடீர் குறைப்பு