ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தப்படலாம்; அதிபர் டிரம்ப் சூசகம்

-நமது சிறப்பு நிருபர்-

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது மீண்டும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கான திட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தயாரித்துள்ளதாக செய்தி வெளியானது.

துருக்கிக்கான அமெரிக்கத் தூதரும், சிரியா விவகாரத்தில் வாஷிங்டனின் முக்கியப் பொறுப்பாளருமான டாம் பராக், இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது, என்றார். அதிபரும் டிரம்பும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதாக சூசகமாக தெரிவித்தார்.

புளோரிடாவில் நடந்த பேரணியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: ஈரான் உலகத்தையும், நமது கூட்டாளிகளையும், வளைகுடா நாடுகளையும் தொடர்ந்து அச்சுறுத்தினால் அதற்கு நிச்சயம் கடும் பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

அந்த பின்விளைவு ஆட்சி மாற்றமா இருக்காது. ஈரானுக்கு எதிராக நாம் மற்றுமொரு சிறிய தாக்குதலை நிகழ்த்தக்கூடும். அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால், 'வாருங்கள், வேலையைத் தொடங்குவோம்' என்று நேரடியாகச் சொல்லிவிடுவார்கள். ஒப்பந்தம் செய்ய ஈரான் ஓப்புக்கொள்ளுமா? இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

Advertisement