அழகப்பா நகை மாளிகை உரிமையாளருக்கு சிறந்த இளம் தொழிலபதிபர் விருது

1

கடலுார்: கடலுார் அழகப்பா நகை மாளிகை உரிமையாளர் அஸ்வினுக்கு, சிறந்த தங்க நகை விற்பனை இளம் தொழிலபதிருக்கான விருது வழங்கப்பட்டது.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் அழகப்பா நகை மாளிகை உரிமையாளர் அஸ்வின். இவருக்கு சென்னையில் நடந்த விழாவில், சிறந்த தங்க நகை விற்பனை இளம் தொழிலபதிருக்கான ‘பேப் ஸ்டார்ஸ் ஐகானிக்’ விருதை தனியார் ‘டிவி’ தொகுப்பாளர் பாவனா, சம்யுக்தா வழங்கி கவுரவித்தனர்.

இதுகுறித்து அஸ்வின் கூறுகையில், ‘கடந்த 60 ஆண்டுகளாக மக்கள் சேவையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த சேதாரத்தில், அனைத்து நகைகளும் புத்தம் புதிய டிசைன்களில் விற்பனை செய்கிறோம். வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனம் மீது வைத்த நன்மதிப்பு காரணமாக விருது கிடைத்தது.

நிறைந்த தரம், குறைந்த விலை, கண்களை கவரும் எண்ணிலடங்கா டிசைன்கள், அதிக வியாபாரம் என்பதே குறிக்கோள். இங்கு, அனைத்து நகைகளும் ெஹச்.யூ.ஐ.டி., 6 இலக்க முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி பொருட்கள் குறைந்த சேதாரம், குறைந்த கூலியில் விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளி மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு முன்னணி நகரங்களில் இருந்து ஏராளமான நகைகள் புதுப்புது டிசைன்களில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது’ என்றார்.

Advertisement