ஆன்லைன் விளையாட்டு போலீஸ் எச்சரிக்கை
தேனி: மாவட்டத்தில் ஆன்லைனில் விளையாடும் குழந்தைகளால் ஆட்டோ சப்ஸ்கிரிப்ஷன் முறையில் பெற்றோர் வங்கி கணக்குகளில் பணம் பறிக்கப்படுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். எஸ்.ஐ., தாமரை கண்ணன் கூறுகையில், வீடுகளில் உள்ள குழந்தைகள் பெற்றோர் அலைபேசிகளில் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுகின்றனர். தவறுதலாக அல்லது தெரிந்து சிலர், விளையாடுவதற்கு ஆட்டோ சப்ஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை கிளிக் செய்கின்றனர். இதனால் மாதம் அல்லது நாள் அடிப்படையில் அலைபேசியில் உள்ள ஆன்லைன் செயலிகள் மூலம் ரூ.200 முதல் ரூ.4000 வரை எடுக்கப்படுகிறது. இதுபற்றி அறியாத பெற்றோர் சிலர், சைபர் மோசடிக்கு ஆளானதாக புகார் கூறுகின்றனர். குழந்தைகள் அலைபேசி பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐரோப்பிய நாடுகளில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்
-
புதிய பஸ் நிலையத்தில் தேங்கிய மழை நீர்
-
மின்சாரம் தாக்கி மாடு பலி
-
விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிப்பது குறித்து ஆய்வு சபாநாயகர் பிரபாகர் தகவல்
-
மகளிர் அணியினர் 2 ஆயிரம் பேருக்கு வெள்ளி விளக்கு பரிசளித்தார் தனுஷ்
-
பருவமழை காலத்தில் பயிர் பாதிப்பை தவிர்க்க வேளாண் துறை அறிவுரை
Advertisement
Advertisement