ஐரோப்பிய நாடுகளில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்

- நமது சிறப்பு நிருபர் -

பாரீஸ், மாட்ரிட், ரோம், லிஸ்பன் என ஐரோப்பாவின் பல நகரங்களில் நடந்து வரும் போராட்டம் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டது. விலைவாசி உயர்வு, வீட்டுவசதி பிரச்னை, அரசின் கொள்கைகள் மற்றும் சமூக பிரச்னைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.

பிரான்ஸ்

பிரான்சில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கருப்பு உடை அணிந்த பயங்கரவாதிகள் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ் குற்றம்சாட்டினார்.

போராட்டம் அமைதியாக நடந்தாலும், மோதல்களை தூண்டுவதற்காக தீவிர இடதுசாரி குழுவினர், போலீசார் மீது பொருட்களை வீசியும், பட்டாசுகளையும் வெடித்ததாக குற்றம்சாட்டினார்.

வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை ஆயிரம் பேரை போலீசார்கைது செய்தனர்.

நேற்று நாடு முழுதும் 4 .10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என அரசு கணித்துள்ளது. பாரீஸில் மட்டும் 1.10 லட்சம் பேர் போராட்டத்தில் குதித்தனர். அதேநேரத்தில் போராட்டத்தை முன்னெடுத்த அமைப்பானது பாரீஸில் 2.50 லட்சம் பேர் உட்பட நாடு முழுதும் 8 லட்சம் பேராராடினர் என கணித்துள்ளது.

பாரீஸ், லியோன் லில்லே, மார்சேல் உள்ளிட்ட நகரங்களில் மோதல் ஏற்பட்டது. 3 ஆயிரம் பேர் தடுக்கப்பட்டதாகவும், 65 பேர் கைதாகியதாகவும் போலீசார் கூறினர்.

டிரம்ப் விமர்சனம்

பிரான்சில் நடக்கும் போராட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், எல்லைகளை திறந்ததால், பிரான்ஸ் பற்றி எரிகிறது. அதன் வழியே வந்தவர்களை பிரான்ஸ், அந்நாட்டு மக்கள், கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், கலை பொருட்கள் ஆகியவற்றை வெறுக்கின்றனர். பிரான்சில் உள்ள அனைத்தையும் வெறுக்கின்றனர் எனக்கூறினார். இதற்கு முன் , பிரான்ஸ் போராட்டம் குறித்து டிரம்ப் தெரிவித்த விமர்சனத்திற்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் கண்டித்து இருந்தார்.

அல்பேனியா

அல்பேனியா தலைநகர் திரானாவில் ஆயிரக்கணக்கானோர் கூடி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக டிரம்ப் குடும்பத்துடன் தொடர்புடைய ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த போராட்டம் நடக்கிறது.

அதில் வன்முறை ஏற்படவே, பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளையும் வீசினர். பதிலுக்கு போலீசார் மீது பட்டாசுகள் வீசப்பட்டன.இதனால் பதற்றம் அதிகரித்தது. அரசு கட்டடங்கள் சேதமாகின. போராட்டக்காரர்கள் பலர் கைதாகி உள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாலி




கடந்த வாரம் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதனால், முன்னெச்சரிக்கையாக, நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். பல்வேறு நகரங்களில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 371 பேரை கைது செய்தனர்.

ஸ்பெயின்

நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ள ஸ்பெயினில், வீட்டு வசதி பிரச்னையை கண்டித்து தலைநகர் மாட்ரிட்டில் போராட்டம் வெடித்தது. கடந்த வாரம் சிறு குழுவினர் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது ஆதரவு பெருகியது. போராட்டக்காரர்களை அப்புறுப்படுத்தியதால் பல நகரங்களுக்கு பரவியது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசு சட்டம் கொண்டு வந்தாலும், அது பார்லிமென்டில் நிறைவேற்ற போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

போர்ச்சுகல்

போர்ச்சுகல்லில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், வாடகைதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லிஸ்பனில் உள்ள சதுக்கம் ஒன்றில் போராட்டம் துவங்கியது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. சிலரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement