2029 மே மாதத்திற்குள் யமுனை நதி சுத்தமாகும் இலக்கு நிர்ணயித்தார் அமைச்சர் அமித் ஷா
புதுடில்லி:
டில்லியில் உள்ள துவாரகாவில் இன்று (அக்.,22) நடந்த நிகழ்ச்சியின்போது, யமுனை நதிக்கு புத்துயிர் ஊட்டும் வகையிலான திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். டில்லி நீர் வாரியம் சார்பில் 8,941.22 கோடி ரூபாய் மதிப்பிலான நீர் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
யமுனை நதியை புனரமைக்கும் முயற்சிகள் முழு வேகத்தில் முடுக்கிவிடப்பட்டன. நதி நீர் மாசு அடைவதை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளில், 40சதவீதம் வரை குறுகிய காலத்திலேயே முடிந்துவிட்டன.
காங்கிரஸ், ஆம் ஆத்மி அரசுகளின் ஆட்சி காலங்களில், யமுனை நதியில் சாக்கடை கழிவு நீர் கலக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், தற்போது டில்லி, உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ., அரசுகளே ஆட்சியில் இருக்கின்றன. இதனால், யமுனை நதியை துாய்மைப்படுத்த காலக்கெடுவுடன் கூடிய கூட்டு செயல்திட்டத்தின் கீழ், மூன்று மாநில அரசுகளும் துாய்மை பணியை தீவிரப்படுத்தின. குறிப்பாக யமுனையில் கலக்கும் தொழிற்சாலை ரசாயன கழிவுகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் ஆகியவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் எடுக்கப்பட்டன.
வரும் 2029, மே மாதத்திற்குள் யமுனை நதியை முழுமையாக துாய்மைப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யமுனையை துாய்மைப்படுத்தும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வலுப்படுத்துவது, சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை விரிவுப்படுத்துவது, குடிநீர் வசதிகளை பெருக்குவது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டன. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
திமுக விடம் ஆலோசனை கேளுங்க. கூவத்தை மணக்க வைத்த பெருமைமிகு சாதனை அவர்களுடையது.
ஆயிரக்கணக்கான நகரங்களில் கிராமங்களிலிருந்து குப்பைகளும் கழிவுநீரும் கங்கை யமுனையில் கலக்கப்படுகின்றன. கரைக்கு அருகே உள்ள ஏராளமான சிறு ஆலைகளின் சுத்திகரிக்கப்படாத வேதி நீரும் மாசுபடுத்திவருகிறது. இவற்றுக்கு தீர்வு கண்டு மாற்று ஏற்பாடுகளை செய்தால்தான் இத்திட்டம் நிறைவேறும். இப்போதும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி இத்திட்டத்தை எதிர்க்கும் பலர் உள்ளனர்.மேலும்
-
காங்கிரஸ் இல்லாமல் திமுக கரை சேர முடியாது; சொல்கிறார் அமைச்சர் விஸ்வநாதன்
-
சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேசுகிறீர்களா? திமுகவை விளாசிய அமைச்சர் அருண்ராஜ்
-
துபாயைவிட இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை மிகவும் குறைவு
-
திருமணத்திற்காக மதம் மாறுவதை அனுமதிக்க முடியாது: ஐகோர்ட்
-
ராகுலுக்கு தேச விரோதிகளுடன் தொடர்பு; பாஜ எம்பி பகீர் குற்றச்சாட்டு
-
அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அந்த பெயரே இருந்துவிட்டு போகட்டும்; டிரம்ப்