கலெக்டர் துவக்கி வைத்த பஸ் நடுரோட்டில் பழுது

தேனி: சின்னமனுாரில் இருந்து தேனி நோக்கி அரசு பஸ் நேற்று முன்தினம் (டி.என்.57 என்.3082) சென்றது. அதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பழனிசெட்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் கடந்து சிறிது துாரம் சென்ற போது திடீரென பஸ் நடுவழியில் நின்றது. பின் மீண்டும் ஸ்டார்ட் ஆகவில்லை. மாற்று பஸ்சில் பயணிகள் அனுப்பப்பட்டனர். பழனிசெட்டிபட்டி டெப்போ பணியாளர்கள் வந்து பஸ் பழுதை சரி செய்தனர். இந்த பஸ் கலெக்டர் சிவகிருஷ்ண மூர்த்தி கடந்த 4 நாட்கள் முன்பு துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. அதற்குள் பழுதாகி நின்றது.

Advertisement