முதல்வர் கோப்பை மாநில கபடி போட்டி: நாமக்கல் மாவட்ட அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் நாமக்கல் மாவட்ட அணி முதலிடம் பெற்றது.

முதல்வர் கோப்பை 2026 மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டிகள் திண்டுக்கல் ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லுாரியில் அக்.,20 முதல் 22 வரை நடந்தது. இதில் நாமக்கல் மாவட்ட அணி முதலிடம் பெற்றது. ஈரோடு மாவட்ட அணி 2ம் இடமும், சென்னை மாவட்ட அணி 3ம் இடமும் பெற்றது.

முதலிடம் பெற்ற அணியினருக்கு தலா ரூ.75 ஆயிரம் வீதம் ரூ.9 லட்சமும், இரண்டாம் இடம் பெற்ற அணியினருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சமும், மூன்றாம் இடம் பெற்ற அணியினருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சம் பரிசுத்தொகை, பதக்கம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

மகளிர் திட்ட இயக்குநர் கங்காதாரணி, ஜி.டி.என்., கல்லுாரி தாளாளர் ரெத்தினம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மேலாளர் முருகவேந்தன், திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement