திண்டுக்கல்லில் அதிகபட்சமாக 41.4 மி.மீ., மழை பதிவு

திண்டுக்கல்: வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் மாவட்டத்தில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் 22 நிமிடங்களில் அதிகபட்சமாக 41.4 மி.மீ., மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாய்க்கால்களில் கழிவுநீர் தேங்கியது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம்(அக்.,21) காலை 8:00 முதல் நேற்று (அக்.,22) காலை 8:00 மணி வரை பெய்த மழையளவு: காமாட்சிபுரம் 13.00 மி.மீ., நத்தம் தாலுகா 0.50 மி.மீ., நிலக்கோட்டை 17.00 மி.மீ., சத்திரபட்டி 23.40 மி.மீ., வேடசந்துார் தாலுகா 7.00 மி.மீ., வேடசந்துார் புகையிலை ஆராய்ச்சி மையம் 6.20 மி.மீ., பழநி 31.00 மி.மீ., கொடைக்கானல் ரோஸ் கார்டன் 6.20 மி.மீ., பிரையண்ட் பூங்கா 1.56 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மொத்த மழைப்பொழிவு 147.26 மி.மீ., ஒரு நாளில் சராசரி மழையளவு 14.73 மி.மீ., என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement