கோவை பள்ளி மாணவன் தற்கொலை; குற்றவாளியை உடனே கைது செய்க; உதயநிதி
சென்னை: கோவை பள்ளி மாணவன் தற்கொலை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது; கோவையில் பள்ளியில் ஏற்பட்ட ஜாதி பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகளைக் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
பள்ளியில் மாணவர்களின் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், ஜாதி ரீதியாக பாகுபாட்டை எதிர்கொண்டு இருக்கிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
மாணவனின் பெற்றோர்கள் உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ள போலீசார், இதுவரை மாணவனின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்யவில்லை.
பள்ளிகள் ஜாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்துவதோடு, இந்த சம்பவத்தில் மாணவனை தற்கொலைக்குத் தூண்டிய உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா பல்கலை கழகத்தில் நடந்த குற்றம் புரிந்த சார் யார்?
ஒற்றுமையாக இருந்த எல்லா ஜாதிகளையும் உங்க கேவலமான அரசியலுக்காக பிரித்து வைத்தது உங்க தாத்தா அதை நீர்த்து போகாம பார்த்து கொண்டது உங்க அப்பா இப்ப நீங்க வந்து நீலி கண்ணீர் வடிக்குற.....அனிதாவ வெச்சி நீட்ட ஒழச்சிட்ட இப்ப இந்த மாணவனை வெச்சி ஜாதிய ஒழிச்சிடேன்.....!!!
சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தலையில் இருந்து பிறந்தவன் காலில் இருந்து பிறந்தவன் என்று ஜாதியை கொண்டு வந்தது யார் என்று உலகுக்கே தெரியும் அதை இந்த திராவிட காட்சிகள் ஊதி பெரிதாக்கி விட்டது
முதல்ல சோறு போடுவத
நிறுத்து.மேலும்
-
அறநிலையத்துறையின் இணை ஆணையர் 18 பேர் பணியிட மாற்றம்; 3 பேருக்கு தற்காலிக பதவி உயர்வு
-
த.வெ.க., கூட்டணி அரசை அடிக்கடி விமர்சிப்பதா? ஜோதிமணி எம்.பி., மீது காங்., நிர்வாகிகள் காட்டம்
-
ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தப்படலாம்; அதிபர் டிரம்ப் சூசகம்
-
போலீஸ் ஏட்டுவின் விஸ்வரூப ஊழல்: ரூ.65 கோடிக்கும் மேல் சொத்து குவிப்பு
-
ரூ.5 லட்சம் லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரை கைது செய்தது சிபிஐ
-
தேர்தல் நெருங்குவதால் டிரம்ப் பல்டி: கனடா இறக்குமதி மீதான வரிகள் திடீர் குறைப்பு