காதலால் சின்னாபின்னமான குடும்பம்; தாய், தந்தை வெட்டிக்கொலை... இரு சிறுமிகளை கடத்திய பரோட்டா மாஸ்டர் கைது

2

தூத்துக்குடி: தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் - மேரி விஜிலா தம்பதியனர். இவர்களுக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். இதில், மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் ஞானபிரகாஷ் என்பவர் காதலித்து வந்துள்ளார்.


இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஞானபிரகாஷூடன் பேசுவதை சிறுமி விட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர், சிறுமியின் வீட்டுக்கு சென்று, முத்துக்கிருஷ்ணனையும், அவரது மகனையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதனை தடுக்க வந்த மேரி விஜிலாவையும் சரமாரி தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடும்பத்திற்கு நேர்ந்ததைக் கண்டு கதறி அழுத இரு சிறுமிகளை, ஞானபிரகாஷ் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் முத்துக்கிருஷ்ணனும் உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ஞானபிரகாஷை தேடி வந்தனர். சாத்தான்குளம் வனப்பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர். கடத்தப்பட்ட சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!


வீடு புகுந்து பெண் வெட்டி சாய்ப்பு; மகள்களை கடத்தி சென்ற இளைஞன்; பகீர் சம்பவம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு


வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement