விஜய்க்கு தனுஷ் போட்டியே கிடையாது; சொல்கிறார் அமைச்சர் மரிய வில்சன்

8

சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் கூறியதாவது; நடிகர் தனுஷ் எனக்கு நீண்ட கால நண்பர். அவருக்கு திருமணம் நடந்ததில் இருந்து நான் அவருக்கு நெருக்கமானவர். ஆனால், அவர் அடுத்தகட்டத்திற்கு போகிறாரா? என்று நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரிகிறது. சமூக வலைதளங்களில் நான் பார்த்திட்டு இருக்கிறேன்.

எனக்கு தெரிந்து வாய்ப்பு மிகவும் குறைவு தான். நான் களத்தில் இருக்கிறேன். விஜய்க்கு வரவேற்பு எப்படி என்பது அனைவருக்கும் தெரியும். அவரது ஊழல் இல்லாத ஆட்சி என்ற ஒரு நிலைப்பாடே போதும். இது ஜனநாயக நாடு, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வாழ்த்துக்களை சொல்லிக்க வேண்டியது தான், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement