2-வது டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு?

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் இஷான் கிஷான் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது, இஷான் கிஷானின் வலது தொடை தசையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் 2வது டி20 போட்டியில் விளையாட மாட்டார் என்று பி.சி.சி.ஐ., அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




வாய்ப்பு?

இஷான் கிஷான் விலகியுள்ளதால், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இஷான் கிஷானின் காயம் காரணமாக முதல் போட்டியிலேயே பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திலக் வர்மா 3-வது வீரராக களமிறக்கப்பட்டார். 2-வது டி20 போட்டி, ஹாக்லி ஓவல் மைதானத்தில் நாளை (அக். 24) நடக்கிறது.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "இஷான் விளையாடாத பட்சத்தில், அவருக்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி களமிறங்க நல்ல வாய்ப்புள்ளது. அணியின் வலுவான போட்டியாளர்களில் அவரும் ஒருவர்" என தெரிவித்தார்.

Advertisement