பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் சூறாவளி வீசி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் இரு நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தொலைதுார புயல் எச்சரிக்கையாக நேற்று பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர். 2000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைத்து மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.

Advertisement