காரைக்குடி டூ மதுரைக்கு இடைநில்லா பஸ் அவசியம் பயணிகள் வலியுறுத்தல்

காரைக்குடி: காரைக்குடி – மேலுார் வரை 4 வழிச்சாலை பணி முடிந்து பஸ் போக்குவரத்து துவங்கியதால், காரைக்குடி முதல் மதுரைக்கு இடைநில்லா பஸ்கள் இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

காரைக்குடியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், மன்னார்குடி, ஈரோடு, கோயம்புத்துார் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர மதுரை மற்றும் திருச்சிக்கு ஒன் டூ த்ரீ மற்றும் ஏ.சி., பஸ்கள் இயக்குகின்றனர். காரைக்குடியில் இருந்து மதுரைக்கு நுாற்றுக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். தற்போது காரைக்குடி -முதல் மேலுார் வரை 4 வழிச்சாலை ரோடு அமைக்கப்பட்டு, பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளன. இந்த வழித்தடத்தில் இடைநில்லா ஒன் டூ ஒன் பஸ் மதுரைக்கு கூடுதலாக இயக்க வேண்டும்.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, பயணிகளின் கோரிக்கை படி காரைக்குடி - முதல் மதுரைக்கு இடைநில்லா பஸ்களை இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றனர்.

Advertisement