பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் உடல் சொந்த ஊரில் அடக்கம்
இடைப்பாடி: சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ், 75. பிரபல பின்னணி பாடகரான இவர், 1989ல், தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ‘காதல் கோட்டை’ படத்தில், ‘வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா’ உள்ளிட்ட பாடல்கள், பெரும் வரவேற்பை பெற்றன. ‘பொற்காலம்’ படத்தில் வரும், ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்கு, தமிழக அரசின் சிறந்த பின்னணி பாடகர் விருது, கலைமாமணி விருது பெற்றார்.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல், சொந்த ஊரான சேலம் மாவட்டம் வேம்படிதாளத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அவர் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாலை, அலங்கரிக்கப்பட்ட தேரில் உடல் வைக்கப்பட்டு, வீடு அருகே உள்ள பொது மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அவரது அண்ணன் மகன் பாலச்சந்தர், கிருஷ்ணராஜ் பாடிய பாடல்களை பாடியபடி சென்றதால், உறவினர்கள் கண்கலங்கினர். மூத்த மகள் ஜீவரேகா, அமெரிக்காவில் இருந்ததால், வாட்ஸாப் வீடியோ கால் மூலம், இறுதி ஊர்வலத்தை பார்த்து கண்ணீர் விட்டார். இளைய மகள் பிரியா, இறுதி காரியம் செய்தார். குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்து, கிருஷ்ணராஜ் உடல், மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலும்
-
தீபாவளிக்கு முன் அகவிலைப்படி உயர்த்தப்படுமா? அக்.28க்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
-
காரைக்குடி டூ மதுரைக்கு இடைநில்லா பஸ் அவசியம் பயணிகள் வலியுறுத்தல்
-
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
விவசாய நிலத்தில் நிலத்தில் மருந்து தெளித்தல், களையெடுத்தல் பணி
-
சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
நிலம் கையகப்படுத்த அளவீடு பணி துரிதம்