பள்ளியில் ஆய்வரங்கம் துவக்கம்
தேவகோட்டை: தேவகோட்டை என்.எஸ்.எம்.வி. பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எம்.வி.பி. சங்கம் சென்னை ஐ.ஐ.டி.எம். பிராவர்தக் தொழில்நுட்ப மையம் இணைந்து அமைத்த ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு மாணவர்களுக்கான பயிற்சி ஆய்வரங்க துவக்க விழா நடந்தது. சங்க தலைவர் முத்துக்கருப்பன் தலைமை வகித்து வரவேற்றார். சங்க செயலாளர் வெள்ளையன் ஆய்வரங்கம் பற்றி விளக்கினார். ஐஐடிஎம் நிறுவன திட்ட ஆலோசகர் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் இன்றைய அவசியம் பற்றி பேசினார். ஆய்வரங்கத்தினை திறந்து வைத்து கனிம வளத்துறை அமைச்சர் பிரபு பேசினார். சங்க பொருளாளர் சரவணன் நன்றி கூறினார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் பங்கேற்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement