இடிந்து விழும் அபாயத்தில் வன அலுவலகம்: ஊழியர்கள் அச்சம்: புதுப்பிக்க நிதியில்லை
சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள வன உயிரின கோட்ட அலுவலகம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், 15 ஊழியர்கள் அச்சத்துடன் பணிபுரிகின்றனர். புதிய கட்டடத்துக்கான திட்டம் நிதியின்றி நிலுவையில் உள்ளது.
வேளச்சேரி செக்போஸ்ட் சந்திப்பில் உள்ள இவ்வலுவலகத்தில், சென்னையில் மீட்கப்படும் பாம்பு, குரங்கு, மான், கிளி உள்ளிட்ட வன உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு, பின் வன உயிரியல் பூங்காக்களுக்கு அனுப்பப்படுகின்றன. இக்கட்டடம், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது; சாலை மட்டத்திலிருந்து 8 அடி பள்ளத்தில் உள்ளது. ஒவ்வொரு மழையின்போதும் சாலையிலிருந்து வரும் வெள்ளநீர் அலுவலகத்தில் தேங்குவதுடன், உயிரினங்களின் கூண்டுகளுக்குள்ளும் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால் கூரையின் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
கட்டடத்தைத் தாங்கும் துாண்களின் அடிப்பகுதிகளும் 60 சதவீதத்துக்கும் மேல் சேதமடைந்து வலுவிழந்துள்ளன. பலத்த காற்று, மழை, இடி, மின்னலின்போது கட்டடத்தில் அதிர்வு ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊழியர்கள் கூறியதாவது:
கட்டடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தால் பணியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. பொதுமக்களும் அலுவலகத்துக்குள் வர அஞ்சுகின்றனர். வன உயிரினங்களையும் ஆவணங்களையும் பாதுகாப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, புதிய கட்டடம் கட்டுவதுடன், அதுவரை அலுவலகத்தைப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகள் கூறுகையில், ‘புதிய கட்டடத்துக்கான திட்ட மதிப்பீடு தயாரித்து கடந்த ஆண்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. நிதி ஒதுக்கப்படாததால் கோப்பு நிலுவையில் உள்ளது’ என்றனர்.
� வேளச்சேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்தின் கான்கிரீட் கூரை பெயர்ந்து, கட்டடம் மோசமான நிலையில் உள்ளது. � துாணின் அடிபாகமும் சேதமடைந்து உள்ளதால், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'