த.வெ.க.,விற்கு எதிரி இனி அண்ணாமலை தானா?: அந்துமணி பதில்கள்
@block_B@சீ.வீரா, காஞ்சிபுரம்:
தினமும் போராட்டம் என்ற பெயரில், பொதுமக்களை துன்புறுத்தும் அபிஜித் தீப்கே, ராகுல் போன்றோரை, மக்கள் எதிர்க்கும் நாள் தொலைவில் இல்லையே?
block_B
டில்லி மக்கள், இத்தகைய போராட்டக்காரர்களால் முகம் சுளிப்பதாகக் கேள்விப்படுகிறேன். வியாபாரிகள் ஏற்கனவே, தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு போட்டனர். இளைஞர்களாகவே இருந்தாலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிட்டால், பொதுமக்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
@block_Y@எம்.சம்சுகனி, துாத்துக்குடி:
வங்கதேச கலகத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு சிலர், அதை முன்மாதிரியாகக் கொண்டு, நம் நாட்டிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்வதாகவும், ஜனநாயகம் என்பது குழப்பத்தை விதைப்பதற்கான உரிமம் அல்ல ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி இருக்கிறாரே?
block_Y
அமைச்சர் ராஜ்நாத் சிங் சொன்னபடி, மேற்படி, 'பார்ட்டி'கள், வெளிநாட்டு கைக்கூலிகள் என்பதை, அவர்களின் பின்னணியைப் படித்தால் புரிகிறது. பின்புலத்தில் உள்ளவர்களின் இலக்கே, நம் நாட்டின் ஜனநாயகத்தை அழித்து, நாட்டை, ஆட்சியைக் கைப்பற்றுவது தான்! இன்னும் சில மாதங்கள்... நடக்கப் போவதை பார்க்கத் தானே போகிறோம்!
@block_P@ப.சினேகா, ஈரோடு:
அமெரிக்க தேர்தலில் தனக்கு போட்டியான ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் நாடு தீப்பற்றி எரியும் என, டிரம்ப் எச்சரிப்பது?
block_P
நம்மூர் லோக்கல் ரவுடி போல பேசியுள்ளார் டிரம்ப். அமெரிக்கர்களே அவரது பேச்சை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
@block_G@பி.ஜெ.பிரகாஷ், தேனி:
'இனிவரும் தேர்தல்களில், த.வெ.க.,விற்கு எதிரி தி.மு.க., கிடையாது. மாஸான தலைவர் அண்ணாமலை தான் எதிரி' என்று, நாஞ்சில் சம்பத் கருத்து பற்றி?
block_G
அண்ணாமலை, ஒரு இன்னோவா கார் பார்சல் தயார் நிலையில் வைத்திருக்கட்டும் என்று அர்த்தம்.
@block_B@ஆர்.கோசலை, நாகர்கோவில்:
ராகுல் ரகசியமாக வெளிநாடுகளுக்கு பறந்து விடுவது ஏன்?
block_B
அவர் இப்போது வியட்நாம் சென்றுள்ளதை தானே கூறுகிறீர்கள். அவர் ஏதாவது போராட்டம் என ஆரம்பிப்பார். அது எக்குதப்பாக தன் கையை மீறி போகும்போது, இப்படி 'கிரேட் எஸ்கேப்' ஆகிவிடுவது அவரது வழக்கம் தான், கோசலை!
@block_Y@ப.பாஸ்கரன், கடலுார்:
பத்து ரூபாய் கோழி முட்டைக்கு அரிவாள் வெட்டு. நம் மக்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றனர்?
block_Y
பொறுமையும், சக மனிதர்களை மதிக்கும் பண்பும் குறைந்து விட்டதைக் காட்டுகிறது!
@block_P@பி.சி.ரகு, விழுப்புரம்:
'வி.சி.க.,வின் நிலைப்பாடு ஒன்று தான்... ஜாதியவாத பா.ம.க., மதவாத பா.ஜ., ஆகிய கட்சிகளுடன், எப்போதும் எங்களுக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' என்கிறாரே அமைச்சர் வன்னியரசு?
block_P
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா... மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
தவெகவுக்கு எதிரி தவெக அமைச்சர்கள் தான்.. வேறு யாருமில்ல..
அண்ணாமலை அடுத்த ஜோக்கர். ராகுல் கான் சோசசப்பு அடுத்து அண்ணாமலை.
அண்ணாமலை ஒரு வீணா போன ஆயுதம் இவரை நம்பி என்னை போன்றவர்கள் ஃபயர் விட்டது வேஸ்ட்...
annamalai will be the Seeman
அண்ணாமலை வைகோ, சீமான் வரிசையில் காமெடியன் ஆகாமல் இருந்தால் சரி.
வன்னியரசு அவர்களே உங்கள் கட்சியே சாதி ரீதியான கட்சி. வேட்பாளர் தேர்வும் சாதி மத அடிப்படையிலேயே நடக்கிறது
அண்ணாமலை என்றைக்கு சி ஜே பிக்கு ஆதரவு என்று தெரிவித்தாரோ அன்றே அவருடைய மரியாதை போய்விட்டது. எனவே இனி விஜய்க்கு அண்ணாமலை தான் என்பது இல்லாமல் போய்விட்டது.
Annamalai supporters during the last elections voted for vijay party defying party discipline.
துண்டு பீடிக்கே கொலை விழும் இந்த தமிழ்நாட்டில் பத்து ரூபாய் கோழி முட்டைக்கு அரிவாள் வெட்டு விழுவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை!
அமெரிக்கா அதிபர் டிரம்ப்
தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்
என கேட்டுபார்த்தார் கிடைக்கல ..வேறு பரிசாவது
தாங்க என கெஞ்சுகிறார்..
வரும் தேர்தல் களத்தில் தோல்விதான் என தெரிந்தும் வெற்றி கைமாறி
போனால் நாடு பற்றி எரியும்
மிரட்டுகிறார் உருட்டுகிறார்.
டிரம்ப் பேச்சை கேட்கவோ
பயப்படவோ நாதி இல்லை..
வை.கோ, நாஞ்சில் சம்பத் போன்றவர்கள் ஒருவருக்கு ஆதரவாகப் பேசினால் அடுத்து அவர் அம்பேல்தான்.ஏன் எனில் இவர்களது ராசி அப்படி.இன்றைக்கு நாஞ்சில் சம்பத் வாயில் அண்ணாமலை சிக்கி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.மேலும்
-
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர் தேர்வு
-
பள்ளி மேலாண்மை விழிப்புணர்வு கூட்டம்
-
சரியான 'ரூட்'டில் பயணிக்கிறார் விஜய்!
-
பா.ஜ.,வுக்கு எதிராக அண்ணாமலை அறிக்கை: மூத்த தலைவர்கள் வருத்தம்!
-
நாட்டின் பணக்கார பிராந்திய கட்சியாக உருவெடுத்தது பாரத் ராஷ்ட்ர சமிதி! ஆட்சியில் இல்லாத போதும் குறையாத பண இருப்பு
-
கோகோ: மன்னர் கல்லுாரி சாம்பியன்