அப்டேட் செய்யப்படாத தமிழக அரசு இணையதளம்; அரசாணைகள் மறைப்பு
சென்னை: தமிழக அரசின் இணையதளம், 'அப்டேட்' செய்யப்படாமல் இயங்குவதால், பார்வையிடும் பொது மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர்.
தமிழக அரசுக்கு, tn.gov.in என்ற இணையதளம் உள்ளது. தேசிய தகவலியல் மையம் வாயிலாக, இந்த இணையதளம் பராமரிக்கப்படுகிறது. அமைச்சரவை, அரசு துறைகள், துறை தலைமை அலுவலகங்கள், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
சட்டசபையில் அரசின் பட்ஜெட் அறிவிப்புகள், கொள்கை விளக்க குறிப்புகள், துறை வாரியாக அமைச்சர்களின் அறிவிப்புகள் உள்ளிட்டவையும் இடம்பெற்று இருக்கும். இது மட்டுமின்றி, நாள்தோறும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் தொடர்பான செய்திகள், புகைப்படங்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
அரசாணைகளும் பதிவேற்றம் செய்யப்படும். இதை பார்த்து, அரசின் செயல்பாடுகளை பலரும் தெரிந்து கொள்வர். திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததற்கான ஆதாரமாக அவை இருக்கும். ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, தமிழக அரசின் இணையதளம் முறையாக இயங்கவில்லை. பல தகவல்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. வேளாண் துறை செயலராக இருந்த சங்கர் மாற்றப்பட்டு, மாதங்கள் ஆகி விட்டன. ஆனால், வேளாண் துறை செயலராக அவர் பணியில் இருப்பதாக, இணையதளத்தில் உள்ளது.
த.வெ.க., அரசு வெளிப்படை தன்மையுடன் இயங்கும் என, பங்கேற்கும் கூட்டங்களில் எல்லாம் முதல்வர் விஜய் கூறி வருகிறார். சட்டசபையில் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை தாக்கலுக்கு பின், பல துறைகள் வாயிலாக திட்டங்களை நிறைவேற்றும் வகையில், அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், பல்வேறு வாரியங்கள், தீர்ப்பாயம், ஆணையம் உள்ளிட்டவற்றிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதுகுறித்த தகவல்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை.
பல தகவல்கள் ரகசியமாகவே கையாளப்பட்டு வருகின்றன. முதல்வர் விஜய் கூறியபடி, அரசின் செயல்பாடுகள் வெளிப்படை தன்மையுடன் இல்லாததால், இணையதளத்தை பார்வையிடும் பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அரசு தலைமையின் அனுமதி கிடைப்பதில் ஏற்படும் தாமதத்தால், தொடர்புடைய துறைகளில் இருந்து அரசாணை குறித்த விபரங்கள், முறையாக தேசிய தகவலியல் மையத்திற்கு அனுப்பப்படுவதில்லை என, இதற்கு காரணம் கூறப்படுகிறது.
ரூபாய் 75000 வரை அணைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் தள்ளுபடி என்ற அரசனை எங்கே ஏன் கூட்டுறவு சங்கங்கள் அணைத்து விவசாய்களுக்கும் ரூபாய் 75000 வரை பயிர் கடன் தள்ளுபடி கொடுக்கவில்லை பேத்தல் அரசு பொய் வாக்குறுதி
இருங்க அய்யா மார்களே விஜய் மற்றும் எல்லா த வெ க கட்சியும் இன்னும் தேர்தல் பரப்புரை மோடில் இருக்கிறார்கள் நிர்வாக ஆளுமை இயக்கம் அரசாங்கம் அரசாட்சி என்ன என்று இன்னும் தெரியவில்லை அவர்கள் இன்னும் விளம்பரம் திமுகவை எதிர்க்கும் அறிக்கைகள் மட்டும் வேலை என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மக்கள் அக்கறை சிந்தனை இல்லாதவர்கள். மின் வெட்டு , கட்டண உயர்வு , பொறுப்பில்லாத பதில்கள் பொறுப்பற்ற கடமை தெரியாத அமைச்சர்களும் உறிப்பனர்களும் கேட்டால் வட கொரியா நாட்டில் கேள்வி படுவது போல் சிறை . அவசர நிலையை விட மோசமானதாக இப்போது தமிழகம் இருக்கிறது
If Government this HR & CE , public will came to know how many Christians are in this dept? So they dont want. Can any Hindu become a Father in Church or Mulla in Mosque?? Only Hindu temples are looted by this governments and for this one separate department with so many staffs. Only Tamilnadu we can see all this. Unless Hindus wont wake up, many temples will become as Church or Mosque in future.
ரீல்ஸ் முக்கியம் அப்புறம் தான் மத்தது , கர்த்தரின் சீடர் ஜோசப் சார் ஆட்சியில் தமிழகத்தின் கடன்கள் அடைக்க பட்டது. தெருவெங்கும் தேனும் பாலும் ஓடுது, பொருக்க முடியாத எதிர் கட்சிகளின் புரளி இது
இன்னும் அந்த கோஷ்டி சினிமாவில் இருந்து வெளியவே வரல.. இடை தேர்தல் வெற்றியா முதல்வரோடு 5 அமைச்சர் சேர்ந்து ஒரு உடல் தோரணை, மழை நீர் சேகரிப்பு பற்றிய விடீயோவை வெளியிடும்போது மறுபடியும் 5 அமைச்சர்கள் முதல்வரோடு சேர்ந்து ஏதோ ஒரு செய்கை இப்படியே ரீல்ஸ் கன்டென்ட் ஆ ஓடுது.. தமாஷா இருக்க வேண்டியதற்கு ரொம்பவே சீரியஸ், சீரியசா செய்ய வேண்டியதை ரொம்ப ரொம்ப தமாஷா செஞ்சிட்டு தமிழ்நாட்டை சுத்தி வராங்க மந்திரிமார்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும்.. இதெல்லாம் செய்யவே நேரம் இல்லாத இவர்களுக்கு அரசாங்கத்தின் இணையதளத்தை அப்டேட் செய்வதற்கு ஏது நேரம்?
ரீல்ஸ் தான் முக்கியம் - இதெல்லாம் இப்போ என்ன அவசியமா ? ...
தமிழக அரசின் வெப்சைட் அப்டேட் செய்யாததற்கு, "வெற்றி பயணம்" மற்றும் "EWS இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாது" ஆகிய காரணங்களால் இருக்கலாம்.
தமிழக அரசில் SOCIAL WELFARE MINISTER AND MINISTRY ஆகியவை எங்கே இருக்கிறது? EWS RESERVATION விஷயத்தில் அவர்கள் ஏன் ஏழைகளுக்கு ஒரு நன்மையும் செய்யாமல் இருக்கிறார்கள்?
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் EWS RESERVATION BILL தாக்கல் செய்யப்பட்டு, பாஸான பிறகு, ஈபிஎஸ் அரசு ஏழைகளுக்கான சட்டத்தை அமல்படுத்தவில்லை.
Many goverment websites are not working. I tried Metro water to get payment receipt.
அப்டேட் செய்யப்படாத தமிழக அரசு இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டிருப்பது நடுநிலை காட்டுகிறது.
அரசு இணையதளமும் செய்யப்படாமல் மறைப்பு. முதல்வரும் பத்திரிகை நிருபர்களை சந்திக்க மாட்டார். ஆக மொத்தம் மக்கள் நிலை கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோலுள்ளது.மேலும்
-
குழந்தைகளை பெற்றோர் ஒப்படைக்க கோரும் வழக்குகளில் நீதிமன்றம் கடமை தவறக்கூடாது: சென்னை ஐகோர்ட் கருத்து
-
ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்க அதிபர் மிரட்டல்
-
கான்கிரீட் காடு! திரும்பும் திசை எல்லாம்... கான்கிரீட் காடு!:குறைந்தது சாகுபடி பரப்பு
-
வாயை மூடி நடக்கவும்
-
விஜய் பாஜவுடன் நெருக்கம்: வந்தது காங்கிரஸுக்கு சந்தேகம்!
-
அமைச்சர்களிடம் மனு அளித்தால் நடவடிக்கை: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை