ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்க அதிபர் மிரட்டல்
வாஷிங்டன்: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யத் தவறினால், 'எபிக் பியூரி' என்ற பெயரில் ஈரான் மீதான மிகப் பெரிய ராணுவத் தாக்குதலை மீண்டும் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்காசிய நாடான ஈரான் மீது 'ஆப்பரேஷன் எபிக் பியூரி' என்ற பெயரில் ராணுவத் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.
அதற்கு முன்னதாக 'ஆப்பரேஷன் மிட்நைட் ஹேமர்' மூலம் ஈரானின் அணுசக்தி செறிவூட்டும் திறனை அழித்துவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தற்போது தணிந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்துவதாக மிரட்டி வருகின்றன.
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் நடந்த குடியரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், “நாங்கள் மீண்டும் ஒரு சிறிய 'எபிக் பியூரி' தாக்குதலை நடத்தக்கூடும். அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால், எங்களுடன் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்வார்கள் அல்லது உடனடியாக பேச்சு நடத்த வருவார்கள்,” என்றார். எனினும், தாக்குதலை தவிர்க்க ஈரான் என்ன செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளை அவர் குறிப்பிடவில்லை.
இதற்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்கினால், வளைகுடா பகுதியில், கடலுக்கடியில் உள்ள தகவல் தொடர்பு கேபிள்களை குறிவைத்து தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்க அதிகாரிகளை ஈரான் குறிவைப்பதாக உளவுத்துறை எச்சரித்ததையடுத்து, சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க துாதரங்களில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இவனுக சண்டைல இணை சேவையை கேபிலை இடைஞ்சல் செய்வது மனிதாபிமனம் இல்லை!
ஆமாம் உங்க ஊர்ல நவம்பர் மாதம் தேர்தல் முடியும் வரை ஈரானோடு போரை நிறுத்தி வைக்கிறேன்னு நோட்டீஸ் விட்டீங்க.
இப்போ மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்க. உங்களை புரிஞ்சுக்கவே முடியலையே.
இந்த டிரம்பு க்கு இஸ்லாமியர்கள் பாடம் புகட்டுவார்கள்
பாடம் புகட்டினால் பெட்ரோல் விலை குறையுமா
இவனை தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்கள் மிகப் பெரிய கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.
மற்ற நாட்டினரும் அவதிப்படுகின்றனர்
ஏவுகணை தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு ஈரான் அமெரிக்காவிடம் வித்தை காட்டி விட்டதாக நினைத்துக்கொண்டு இருக்கிறது. உண்மையான நிலைமை வேறு.
இவனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு உடனே கொடுங்கள் உலக அமைதியின் காவலன் இவன் தான்மேலும்
-
கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி
-
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
-
வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
-
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
-
பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு
-
படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்