தாசில்தார்கள் 6 பேர் இடமாற்றம்
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் ஆறு தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் கந்தசாமி
உத்தரவிட்டார்.
இதன்படி டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லரை வணிகம்)
ரவிச்சந்திரன் - பெருந்துறை தாசில்தாராகவும், பெருந்துறை தாசில்தார்
செல்வகுமார் - ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர்
பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், இப்பணியில்
இருந்த ஜாகீர் உசேன் - ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும்
மாற்றப்பட்டார். ஈரோடு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன் -
டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லரை வணிகம்) பணிக்கும், கோபி கோட்ட கலால்
அலுவலர் கவியரசு - கோபி ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும்,
இப்பணியில் இருந்த கேசவமூர்த்தி - பெருந்துறை சமூக பாதுகாப்பு திட்ட
தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement