ஓட்டு சாவடிகள் சீரமைப்பு ஆலோசனை கூட்டம்
செஞ்சி: செஞ்சி தொகுதியில் ஓட்டு சாவடிகள் மறுசீரமைப்பு செய்வது குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது.
செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில், தொகுதி ஓட்டு சாவடிகள் மறு சீரமைப்பு மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். தாசில்தார் ஏழுமலை முன்னிலை வகித்தார்.
தேர்தல் பிரிவு தாசில்தார்கள் செஞ்சி உமா மகேஸ்வரி, மேல்மலையனுார் சார்லின் மற்றும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., காங்., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்த கொண்டனர்.
இதில், என்.ஆர்.பேட்டை, அங்கராயநல்லுார், தடாகம், போத்துவாய், ராமராஜன் பேட்டையில் தனித்தனி ஓட்டு சாவடி அமைக்க வேண்டும் என த.வெ.க., சார்பிலும், அப்பம்பட்டு, கோனையில் தனித்தனி ஓட்டு சாவடி வேண்டும் என அ.தி.மு.க., சார்பிலும், காரை ஊராட்சி கொசப்பாளையத்தில் தனி ஓட்டு சாவடி அமைக்க வேண்டும் என பா.ம.க., சார்பிலும், கணக்கன் குப்பத்தில் ஒரே இடத்தில் உள்ள நான்கு ஓட்டு சாவடிகளை அந்தந்த பகுதியில் அமைக்க வேண்டும் என தே.மு. தி.க சார்பிலும் கோரிக்கை வைத்தனர்.
மேலும்
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
-
இஸ்ரேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு; அதிபர் நெதன்யாகுவுக்கு பின்னடைவு
-
12,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம்! தொடர் கண்காணிப்பில் மாவட்ட அதிகாரிகள்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'