போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரோட்டரி சங்கம் சார்பில், கல்லுாரி மாணவர்களின் போலியோ விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., சோமசுந்தரம் துவக்கி வைத்தார்.
ரோட்டரி சங்க தலைவர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், ரோட்டரி நிர்வாகிகள் தீபக் கண்ணன், சண்முகசுந்தரம், கன்னியாரமேஷ், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி வ.உ.சி., தெரு, திரு.வி.க., வீதி, காமராஜர் தெரு, எம்.ஜி., ரோடு, கிழக்கு பாண்டி ரோடு வழியாக சென்று பழைய பஸ் நிலையத்தை அடைந்தது.
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி, இ.எஸ். நர்சிங் கல்லூரி, விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, போலியோ ஒழிப்பு குறித்தும், சொட்டு மருந்து குறித்தும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி சென்றனர்.
ரோட்டரி சங்கத்தினர், போலீசார் கலந்துகொண்டனர்.
மேலும்
-
கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி
-
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
-
வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
-
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
-
பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு
-
படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்