மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மதுவில் களைக்கொல்லி கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சின்னசேலம் அடுத்த வரதப்பனுாரைச் சேர்ந்தவர் திருசங்கு, 41; இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த அவர் குடிபோதைக்கு அடிமையானார்.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி மதுவில் களைக்கொல்லியைக் கலந்து குடித்தார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருசங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement