ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் இலவச மருத்துவ முகாம்
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த ஆண்டார் முள்ளிப்பள்ளத்தில் ஐ.எல் அண்ட் எப்.எஸ்., பவர் கம்பெனி மற்றும் புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், இலவச கண் மற்றும் பொதுமருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு ஐ.எல் அண்ட் எப். எஸ்., நிலைய அதிகாரி குகன் தலைமை தாங்கினார். பொதுமேலாளர்கள் இளவரசன், சதீஷ் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார்.
மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, மருத்துவர் மதுக்கரொட்டி குழுவினர் பொதுமக்களுக்கு கண்நோய், கண்புரை நீக்குதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், குழந்தைகள் நலம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
கோதண்டபாணி அறக்கட்டளை தலைவர் ராமலிங்கம், தலைமை ஆசிரியர்கள் ரமேஷ், செல்வி, முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், அன்புமணி, பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை மகேஷ் குமார் செய்தார்.
மேலும்
-
கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி
-
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
-
வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
-
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
-
பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு
-
படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்