லாட்டரி விற்றவர் கைது

குமாரபாளையம்:குமாரபாளையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகளவில் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர்தாமரைசெல்வன், எஸ்.ஐ., மலர்விழி உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். ஆனங்கூர் சாலை, கல்லங்காட்டுவலசு
பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடப்பதாக அறிந்து அங்கு நேரில் சென்று கண்காணித்தனர்.
அங்கு ஒருவர், லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை பிடித்த போலீசார், கேரளா லாட்டரி சீட்டுகள், 200 எண்ணிக்கையில் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், 42, என்பது தெரியவந்தது. இவரை கைது செய்த குமாரபாளையம் போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement