இஸ்ரேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு; அதிபர் நெதன்யாகுவுக்கு பின்னடைவு
ஜெருசலேம்: 2023ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேலில் பிரதமர் பதவிக்கான பொதுத்தேர்தல் நடந்தது. முன்னெப்போதும், இல்லாத அளவுக்கு ஓட்டுகள் பதிவாகியிருந்தன.
20 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வரும் நெதன்யாகு, மிக நீண்ட காலம் அந்தப் பதவியில் இருப்பவர் என்ற பெருமையைப் பெற்றார். ஹமாஸ், ஈரான் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதாக உறுதியளித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பிரதமர் நெதன்யாகுவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத் தலைவரான காடி ஐசென்காட் தலைமையிலான கூட்டணி, நெதன்யாகுவின் கூட்டணி கட்சிகளை விட சிறிய அளவிலான முன்னிலை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பின்படி, எதிர்க்கட்சிக் கூட்டணி 52 முதல் 53 இடங்களையும், நெதன்யாகுவின் கூட்டணி 50 இடங்களையும் பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 25 இடங்களுடன் நெதன்யாகுவின் 'லிக்குட்' கட்சியே பார்லியில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும், என தெரிய வந்துள்ளது.
மேலும்
-
நகராமல் ஒரே இடத்தில் அர்னாப் புயல்; கரையை கடக்க 3 மணி நேரமாகும் என கணிப்பு
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
-
12,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம்! தொடர் கண்காணிப்பில் மாவட்ட அதிகாரிகள்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'