12,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம்! தொடர் கண்காணிப்பில் மாவட்ட அதிகாரிகள்
காஞ்சிபுரம்: கடந்த 5 ஆண்டு கால மழைக்கால பாதிப்புகளை ஆய்வு செய்ததில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 72 இடங்களில் மழைநீர சூழ்ந்து, 12,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், அந்த பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து, மீட்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி உள்ளனர்.
வடகிழக்கு பருவமழை, சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இம்முறை காலநிலை மாற்றம் காரணமாக இயல்பை காட்டிலும், கூடுதலாக மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 2022ல், 'மாண் டஸ்' புயல், 2023, 'மிக்சாங்' புயல் ஆகிய வற்றால், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. 2026 நவம்பர் அல்லது டிசம்பரில் புயல் உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தயார் நிலை
பருவமழை காலத் தில் மீட்பு பணிகளை கையாள்வதற்கு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், இரு மாதங்களாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்வாரியம், தீயணைப்பு, வருவாய், போலீஸ் போன்ற, 11 துறையினர் அடங்கிய, 45 மண்டல குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மழைநீர் புகும் இடங்களில் பணியாற்றுவர்.
கனமழை பெய்யும் பகு திகளை கண்காணிக்கவும், அங்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், புகார் களை பதிவு செய்யவும், நேரடி கூட்டங்களிலும், அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா அறிவுறுத்தி வருகிறார்.
வருவாய் துறை மட்டுமல்லாமல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பிடிஓ அலுவலகங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாமல் ஏரி, தென்னேரி, மணிமங்கலம் ஏரி, செம்ப ரம்பாக்கம் போன்ற பெரிய நீர் ஆதாரங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரத்துார் நீர்த்தேக்க பணிகள் இன்னும் முழுமையாக முடியாத நிலையில், அந்த நீர்தேக்கமும் கண்காணிப்பில் உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழைநீர் சூழ்ந்து பாதிக்கும் இடங்களாக, 72 இடங்கள் கண்டறியப் பட்டுள்ளன. இந்த இடங் களில் உள்ள வீடுகளை கணக்கிட்டதில், 12,000 வீடுகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
முன்னுரிமை
இந்த வீடுகளை எளி தாக மழைநீர் சூழ்ந்து கொள்ள வாய்ப்பு உள்ள தால், பல்வேறு துறை அதி காரிகள், மழை பாதிக்கும் பகுதிகளை கண்காணிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத் தில், மழையால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாக, குன்றத்துார், மாங் காடு சுற்றிய பகுதிகளே உள்ளன. அதிலும், குன் றத்துார் தாலுகாவில் உள்ள ராயப்பா நகர், அஷ்டலட் சுமி நகர், சாந்தி நிகேதன் நகர், மகாலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர் போன்ற இடங்கள் உள்ளன.
அதேபோல், காஞ்சி புரம் மாநகராட்சியில், பாரதி நகர், அருந்ததியர்பாளையம், மின் நகர், வேகவதி ஆற்றின் கரையோர பகுதிகள் மழையால் அதி களவில் பாதிக்கப்படும்.
மேலும், மாவட்டம் முழுதும் உள்ள கர்ப்பிணியர், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்- சிறுமியர், சமீபத் தில் பிரசவம் ஆன பெண்கள் ஆகியோருக்கு முன் னுரிமை அளித்து மீட்கஅதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 8,490 கர்ப் பிணியர் உள்ளனர். அதே போல, 1,970 பெண்க ளுக்கு சமீபத்தில் பிரசவம் ஆகியுள்ளது. மேலும், 5 வயதுக்குள் 91,427 சிறு வர் - சிறுமியர் உள்ளனர். இந்த தரப்பினரை, மழை, வெள்ளம் ஏற்படும்போது மீட்புக்குழுவினர் அடை யாளம் கண்டு முன்னு ரிமை அளித்து மீட்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ கூறியதாவது: கர்ப்பிணியர், பாலுாட்டும் பெண்கள் போன்றோர் விபரங்கள் சுகாதாரத்துறையிடம் உள்ளது. மழை, வெள்ள பாதிப்பு ஏற்படும்போது, அவர்களை தனி கவனம் செலுத்தி மீட்கவும், இடமாற்றம் செய்ய வும், கிராம சுகாதார செவி லியர் உதவியுடன் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது. இம்முறை, 45 மண்டல குழுக்கள் நியமித்துள்ளோம். கால நிலை மாற்றம் காரணமாக இம்முறை அதிக மழைப்பொழிவு இருக்கும் என்பதால், முன் கூட்டியே அனைத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அறநிலையத்துறை நியமிப்பதை உறுதியாக அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கண்டிப்பு
-
100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
-
ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
-
இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்
-
ஸ்பெயினில் வெடித்தது போராட்டம்; ரயில் விபத்தைத் தொடர்ந்து அமைச்சர் பதவி விலக மக்கள் வலியுறுத்தல்