கரும்புக்கான ஊக்க தொகை தீபாவளிக்குள் வழங்க கோரிக்கை

நெல்லிக்குப்பம்: கரும்புக்கான ஊக்கத் தொகையை தீபாவளிக்குள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கான விலையை அறிவிக்கும். இது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பொறுந்தும். மாநில அரசுகள் சூழ்நிலைக்கேற்ப கூடுதல் விலையை அறிவிக்கும். அதை தனியார் ஆலைகள் வழங்கி வந்தன.

ஆனால் 2013ம் ஆண்டு முதல் மாநில அரசுக்கு கூடுதல் விலை அறிவிக்க அதிகாரமில்லை என கூறி மத்திய அரசு விலையை விட குறைவாகவே வழங்கி வருகின்றனர். இதை சரி செய்ய கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் விலையை் உறுதி செய்ய மாநில அரசு ஊக்க தொகை வழங்குகிறது. கடந்த 2025–2026ம் ஆண்டுக்கு மத்திய அரசு ரூ.3550 விலை அறிவித்துள்ளது. தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு விலை கூட கிடைக்காது. டன்னுக்கு 3290 மட்டுமே கிடைத்தது.

தற்போதைய தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி கொடுத்த டன்னுக்கு ரூ. 4 ஆயிரம் என்பதை உறுதி செய்ய ஊக்க தொகையாக டன்னுக்கு 710 ரூபாய் வழங்க ஆணையிட்டது. இதற்காக ரூ.603 கோடி நிதி ஒதுக்கியது. இந்த ஊக்க தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.

Advertisement