டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; டிவியை பார்த்து தப்பிக்க முயன்ற குற்றவாளிகள்
மும்பை: மும்பையில் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீசார் தேடும் விவரங்களை டிவியில் பார்த்து, குற்றவாளிகள் தப்பிக்க முயன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள ஜூஹு பகுதியில் வசித்து வரும் பிரபல ஹிந்தி நடிகர் டைகர் ஷெராப் மீது, கடந்த 18ம் தேதி மூன்று பேர் அடங்கிய கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். டைகர் ஷெராபின் ஓட்டுனர் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு குஜராத் சிறையில் உள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிய மூன்று பேரையும் அக். 19ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில், ரயிலில் சென்றபோது போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தப்பியோடியவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், போலீஸ் நடவடிக்கைகள் குறித்த தகவலை உடனுக்குடன் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் முகங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் டிவியில் ஒளிபரப்பானதை பார்த்து, குற்றவாளிகளுக்கு உடனடியாக போன் செய்து, 'உங்கள் முகங்கள் டிவியில் வந்துவிட்டன; உடனடியாக அந்த இடத்தை விட்டுத தப்புங்கள்' என எச்சரித்துள்ளனர்.
மேலும், போலீசார் பைக்கை கண்டுபிடித்தது, குற்றவாளிகள் ரயிலில் பயணம் செய்வது போன்ற அனைத்து தகவல்களையும் போன் மூலமாகவே உடனுக்குடன் தகவல் பரிமாறி கொண்டுள்ளனர். இதனால், போலீசாரிடம் சிக்காமல் இருக்க பைக்கில் இருந்து ரயில், கார் என தொடர்ந்து தங்களது பயண வழிகளை மாற்றிக்கொண்டே தப்பிக்க முயன்றுள்ளனர்.
மேலும்
-
இரண்டு மாத குழந்தை வயிற்றில் வளரும் கரு
-
மழைநீர் வெளியேற்ற எம்.எல்.ஏ., நடவடிக்கை
-
இறப்பு விபர மருத்துவ சான்றிதழ்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க கோரிக்கை
-
நத்தம் ரோட்டில் அதிகரிக்கும் டூவீலர் விபத்து உயிரிழப்புக்கள்: எஸ்.பி., நடவடிக்கை அவசியம்
-
திருவொற்றியூர் வாரிய குடியிருப்பு கட்டுமான பணிகள் இழுபறி மூன்று ஆண்டுகளாக சிரமப்பட்டு வரும் பயனாளிகள்
-
இடிந்து விழும் அபாயத்தில் வன அலுவலகம்: ஊழியர்கள் அச்சம்: புதுப்பிக்க நிதியில்லை