தேசிய மின்தேவையை முன்கூட்டியே கணிக்காதது ஏன்? மத்திய அரசுக்கு நிர்மல்குமார் கேள்வி

2

சென்னை: தமிழக அரசு மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது பற்றி மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டிருப்பதாவது; ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ராஜஸ்தான் மாநிலம் ரூ.46 செலவு செய்கிறது. இது மத்திய அரசின் தேசிய அளவிலான மின் தேவை கணிப்பு, போதுமான திட்டமிடல் குறித்த கேள்விகளை எழச் செய்கிறது. தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையேயான இடைவெளியை ஏன் முன்கூட்டியே கணிக்கப்படவில்லை. இதை மத்திய மின் அமைச்சகம் ஆய்வு செய்து, முன்னரே ஒருங்கிணைத்திருக்க வேண்டும்.

எதிர்காலத்தில் மாநில அரசுகள் இதுபோன்று அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதை மத்திய அரசு தடுக்க வேண்டும். இதற்காக, மத்திய மின் அமைச்சகம் தேசிய அளவிலான முன்னறிவிப்பு, மாநிலங்களுடனான சிறந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை உடனடியாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement