‘இப்போதைக்கு இதுவும் முக்கியமே’: மது பிரியர்களை உஷார்

பந்தலூர்: நீலகிரியில் தொடர் மழை காரணமாக, டாஸ்மாக் கடைகள் மாலை 6:00 மணிக்கு மூடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில், கடந்த 23 ம் தேதி இரவு கன மழை பெய்து, மண்சரிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மாவட்டம் முழுவதும் மூன்று நாட்களுக்கு சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதுடன், இரவு நேர போக்குவதற்கும் தற்காலிக தடை விதித்தது.

இதேபோல், மது பிரியர்கள் மழையால் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகள், 24,25,26 ஆகிய தேதிகளில் மாலை, 6:00 மணிக்கு மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

24 ம் தேதி மாலை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இது குறித்து தெரியாத மது பிரியர்கள் இரவு, 8:00 மணி வரை கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

26 ம் தேதி (நாளை) வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement