பா.ஜ., மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல் ‘மாஜி’ மாநில பொதுச்செயலர் உட்பட மூவர் மீது வழக்கு
தஞ்சாவூர்: தஞ்சாவூர், தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த, பா.ஜ., முன்னாள் மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் உட்பட மூவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில், பா.ஜ., முன்னாள் மாநிலப்பொது செயலர் கருப்பு முருகானந்தத்தின், ஆதரவாளர்கள் நேற்று (அக்.,23) போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.,வினருக்கு அழைப்பு விடுத்தனர். இதில், பா.ஜ.,வில் பொறுப்பில் உள்ள பலரும், கலந்துக்கொள்ளாமல் தவிர்த்தனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை சேர்ந்த வினோத், தஞ்சாவூர் மாவட்டம், அத்திவெட்டியை சேர்ந்த, பா.ஜ., முன்னாள் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் பிரிவு நிர்வாகியான ரமேஷ் இருவரும், தஞ்சாவூர், தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக உள்ள ஜெய்சதிஷ்க்கு போன் செய்து, கருப்பு முருகானந்தத்துக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏன் பா.ஜ.,வினரை கலந்து கொள்ளாமல் தடுத்தீர்கள் எனக்கூறி, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, ஜெய்சதீஷ் தஞ்சாவூர் கிழக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரில், போலீசார் வினோத், ரமேஷ் மற்றும் மிரட்டலுக்கு துாண்டிய கருப்பு முருகானந்தம் ஆகிய மூவர் மீதும் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக மழை; அதிகபட்ச மழைப்பொழிவு எங்கே?
-
கின்னஸ் சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் 'செப்' தாமு காலமானார்
-
பாரா ஆசிய விளையாட்டில் வரலாற்று சாதனை; வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சவுதியில் தொடரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்; நவம்பர் 7 வரை ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை ரத்து
-
புயல் வருது… கனமழை கொட்டுது... 9 துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
நெரூர் காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்