இணைப்பு விழா

சிவகாசி: வெம்பக்கோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் இணைப்பு விழா நடந்தது. இதில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் வெம்பக்கோட்டை சங்கங்கள் ஒன்றாக இணைந்தது. மாவட்டத் தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். செயலாளர் சுதந்திரக் கிளாரா வரவேற்றார். அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் ராஜன், முத்து வெள்ளையப்பன், முருகானந்தம், நீதித்துறை ஊழியர் சங்கம் மாசிலாமணி, ஆதிதிராவிடர் நலத்துறை அடிப்படை பணியாளர் சங்கம் கண்ணன் பேசினர். அரசு ஊழியர் சங்கம், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் இணைந்தனர்.

Advertisement