தற்காலிக பஸ் நிலையத்தில் மின் ஒயர் திருட முயற்சி

ஆவடி: ஆவடி தற்காலிக பேருந்து நிலையத்தில், மர்ம நபர்கள் மின் ஒயர்களை திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி சி.டி.எச்., சாலையில் உள்ள காலி இடத்தில், தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு, 20 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில், மூன்று தனியார் காவலாளிகள் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (அக்.,25) அதிகாலை, பேருந்து நிலைய வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், 20 மின் விளக்குகளின் ஒயர்களைத் துண்டித்து திருட முயன்றனர்.

அதைக்கண்ட காவலாளி சப்தமிட்டார். அதனால், துண்டிக்கப்பட்ட ஒயர்களை போட்டுவிட்டு தப்பினர்.

Advertisement