மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறிப்பு

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் யாதவர் தெருவைச் சேர்ந்தவர் முத்துகருப்பு. இவரது மனைவி பாண்டியம்மாள் 80. இவர் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், பாண்டியம்மாள் முகத்தில் மிளகாய் பொடி துாவினார். மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை வைத்துவிட்டு, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பினார். தகவலறிந்த போலீசார் மர்ம நபரை தேடுகின்றனர்.

Advertisement