போலியோ விழிப்புணர்வு ஊர்வலம்
புதுச்சேரி: பாண்டிச்சேரி ஈவ்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் உலக போலியோ தினத்தை போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காமராஜர் சிலை அருகே துவங்கிய ஊர்வலத்தை மாவட்ட ஆளுநர் வைத்தியநாதன் மற்றும் மண்டலம்–4, உதவி ஆளுநர் சவுரிராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில், சங்கத்தின் தலைவர் கிளாடின், செயலாளர் கலா மற்றும் பொருளாளர் தாமரைச்செல்வி, நிர்வாகிகள் மேரி அன்னா தயாவதி, மேரி ஸ்டெல்லா, அனுராதா ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காமராஜர் சிலை அருகே துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் ‘ஒன்றிணைந்து போலியோவை முற்றிலும் ஒழிப்போம்’ தலைப்பில் நேரு வீதி, மிஷன் வீதி வழியாக கடற்கரையை அடைந்து, காந்தி சிலை அருகே முடிவடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement