பணத்திற்காக வியாபாரி அடித்துக் கொலை: கைது 8
பட்டிவீரன்பட்டி: மதுரை மாட்டுத்தாவணி தக்காளி மண்டி உரிமையாளர், பணத்திற்காக அடித்துக் கொலை செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உடல் வீசப்பட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்தவர் ராமநாதன் 60. மதுரை மாட்டுத்தாவணியில் தக்காளி மண்டி கடை நடத்தி வந்தார். இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவி இறந்துவிட்ட நிலையில், ராமநாதன் தனியாக வசித்து வந்தார். அவரது கடையில் வேலை பார்த்த, திருநாவுக்கரசு, ராமநாதனிடம் அதிக பணம், நகை இருப்பதை அறிந்து, அவற்றை பறிப்பதற்கு திட்டமிட்டார். 11 பேர் கொண்ட கும்பல், செப்.,23ல், காரில் ராமநாதனை கடத்தி உசிலம்பட்டி அருகே ஆரியாபட்டியில் உள்ள தோட்டத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி, அவரிடம் இருந்த நகை, வீட்டுச் சாவியை பெற்று, வீட்டில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றனர்.
ராமநாதனை கடுமையாக தாக்கியதில் இறந்தார். அவரது உடலை பட்டிவீரன்பட்டி அருகே சாலைப்புதுார் அருகே வீசிச் சென்றனர்.
பட்டிவீரன்பட்டி போலீசார், ராமநாதன் உடலை கைப்பற்றி, அவரை யாரும் தேடி வராததால், ஒரு வாரத்திற்கு பிறகு பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்து விட்டனர். இந்நிலையில், ராமநாதனை காணவில்லை என அவரது உறவினர்கள் மதுரை செல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். மதுரையில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் கொலையாளிகளை தேடி வந்தனர். இதில், செல்லுார் போலீசார் கொடுத்த தகவலின் பேரில், உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி தினேஷ் 25, கார்த்தி 32, ஆரியாபட்டி சிவக்குமார் 26, மதுரை செல்லுார் மீனாட்சிபுரம் கார்த்தி 28, கீழத்தோப்பு கவியரசன் 34, கரிமேடு உதயகுமார் 31, புளியந்தோப்பு சின்னமணி 27, கோசாகுளம் சிதம்பரம் 40 ஆகிய 8 பேரை பட்டிவீரன்பட்டி போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
காரைக்குடி டூ மதுரைக்கு இடைநில்லா பஸ் அவசியம் பயணிகள் வலியுறுத்தல்
-
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
விவசாய நிலத்தில் நிலத்தில் மருந்து தெளித்தல், களையெடுத்தல் பணி
-
சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
-
நிலம் கையகப்படுத்த அளவீடு பணி துரிதம்
-
வால்பாறை பயணத்தை தவிர்க்க அறிவுரை: அபாயகரமான பகுதிகளில் கவனம் தேவை