ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு அனைத்து கட்சிகள் ஆலோசனை

ப.வேலுார்:பரமத்தி வேலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளை பிரித்தல் மற்றும் இடமாற்றம் செய்வது தொடர்பான அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

பரமத்தி வேலுார் சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர் காரல் மார்க்ஸ், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலையொட்டி, பரமத்தி வேலுார் தொகுதி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டுச்சாவடிகளை மறுசீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.தொடர்ந்து, தேர்தல் துணை தாசில்தார் பெரியசாமி பேசுகையில், ''ஓட்டுச்சாவடி மறுசீரமைப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் தங்களது ஆலோசனை
களையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம். பெறப்படும் கருத்துகள் முறையாக பரிசீலித்து, தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்,'' என்றார்.
சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு ஆய்வு கூட்டம், நேற்று மாலை, 3:00 மணிக்கு, தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. நாமக்கல் தனித்துணை ஆட்சியரும், சேந்த
மங்கலம் சட்டசபை தொகுதி ஓட்டுப்பதிவு அலுவலருமான கற்பகம், கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளிலும் இதுபோன்ற ஆய்வு கூட்டங்கள் நடைபெறும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement