நாமக்கல்லில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி
நாமக்கல்:ஆர்.எஸ்.எஸ்.,
அமைப்பு தொடங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டு, ஆண்டுதோறும்
நாடு முழுவதும் அந்த அமைப்பின் சார்பில் அணிவகுப்பு பேரணி
நடத்தப்படுவது வழக்கம். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக இந்த
பேரணிக்கு நீதிமன்ற அனுமதி பெற்று நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,
நாமக்கல்லில், நேற்று ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடந்தது. நாமக்கல் பூங்கா
சாலையில் இருந்து புறப்பட்ட பேரணியை, சுரேஷ் கொடியசைத்து தொடங்கி
வைத்தார். இப்பேரணி, பூங்கா சாலையில் தொடங்கி உழவர் சந்தை,
பொய்யேரிக்கரை, செல்லம் காம்ப்ளக்ஸ், அண்ணா நகர், பரமத்தி சாலை
சந்திப்பு, பெரியபட்டி ரோடு, 5வது குறுக்கு தெரு, சந்தைப்பேட்டை
புதுார், பரமத்தி ரோடு மற்றும் கல்வி உலகம் வழியாக சென்று மீண்டும்
புறப்பட்ட இடமான பூங்கா சாலையை அடைந்தது.
இப்பேரணியில், 200 பேர்
முழு சீருடை அணிந்தும், 100க்கும் மேற்பட்டோர் சீருடை இல்லாமலும்
கலந்துகொண்டு அணிவகுத்து சென்றனர். பேரணியையொட்டி, 2
ஏ.டி.எஸ்.பி.,க்கள், 5 டி.எஸ்.பி.,க்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் உள்பட
மொத்தம், 313 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பேரணி
நிறைவடைந்ததும், பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு,
சோமசுந்தரம் தலைமை வகித்தார். சேகர் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்.
மண்டல உடற்பயிற்சி பொறுப்பாளர் சங்கர் சிறப்புரையாற்றினார். பா.ஜ.,
மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஷ் உள்பட நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.