சன்னரக அரிசி விற்பனை குறைதீர்வு எண் அறிவிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் சன்னரக அரிசி விற்பனை குறைதீர்வு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலக செய்திக்குறிப்பு:

தமிழக அரசு, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுபாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதையொட்டி, சன்னரக அரிசியின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை கடந்த 17ம் தேதி முதல் சென்னையில் முதல் கட்டமாக 30 இடங்களில் துவங்கப்பட்டது.

தமிழகம் முழுதும் இந்த திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்து, 34 மாவட்டங்களில் செயல்படும் 184 கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு சன்னரக அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்த விற்பனை கூட்டுறவு பண்டகசாலை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள், விவசாயிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் துறை பணியாளர்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மேலும் எளிதாவும், விரைவாகவும் மாவட்ட தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில், பிரத்யேக வாட்ஸ் அப் எண் 9629396424 என்ற கூட்டுறவு துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement