ஐப்பசி பவுர்ணமிஅண்ணாபிேஷகம்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர்சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. 18 வகையான அபிேஷகம் செய்து, 51 படி அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு, மங்களநாதர் சிவலிங்கம் மீது அன்னத்தால் சாற்றப் பட்டது. காய்கறிகள், பழங்கள் இவற்றை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டார். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருமேனியில் சாற்றப்பட்ட சோறு கோயிலில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் மீன்களுக்கு இரையாக்கப்பட்டது. பின் வீதியுலா புறப்பாடு நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement