மீனாட்சி அம்மன் பார்த்து கொள்வார் மின்வெட்டு பற்றி பழனிசாமி ஆவேசம்
திருச்சி: ‘‘வீட்டை விட்டு வெளியே வந்தால், மீண்டும் வீட்டுக்கு செல்வோமா என்பது சந்தேகம் தான் என்ற நிலைமை உள்ளது,’’ என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில், இன்று (அக்.,30) அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. வீட்டை விட்டு வெளியே வந்தால், மீண்டும் வீட்டிற்கு செல்வோமா என்பதே சந்தேகமாக உள்ளது. ‘ஜாக்பாட்’டில் தான், ஆட்சிக்கு த.வெ.க., வந்துள்ளது. ஐந்து தொகுதி இடைத்தேர்லில் அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் அறிவிப்புக்கு பின் முடிவெடுப்போம்.
இதுவரை நடந்த த.வெ.க., ஆட்சிக்கு, மைனஸ் பூஜ்யம் மதிப்பெண் தான் கொடுக்க முடியும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நான் சாமி தரிசனம் செய்தபோது மின்வெட்டு ஏற்பட்டது. அதற்கு, ஏதேதோ காரணத்தை கண்டுபிடித்து, அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறார் அவரை மீனாட்சி அம்மன் பார்த்துக் கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தேனி சிறையில் கைதிகள் துன்புறுத்தல்? அறிக்கை அளிக்க உத்தரவு
-
450 டன் வெங்காயம் எங்கே? அதிகாரிகள் பதிலால் குழப்பம்
-
த.வெ.க., கூட்டணியில்சேர பா.ம.க., தயாராக உள்ளது: சொல்கிறார் அர்ஜூன் சம்பத்
-
கோவை சிறை வாசலில் தப்பிய விசாரணை கைதி ராகவன் மீண்டும் கைது
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்; ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தனியார் வசமாகிறதா 'டாஸ்மாக்': பரிசீலனை செய்கிறோம் என்கிறார் அமைச்சர்