ஓய்வை அறிவிக்கும் முடிவில் தோனி? 2027 பிரீமியர் லீக் தொடர் பற்றி அவரே சொன்ன பதில்
பெங்களூரு: பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் முக்கிய வீரராக இருப்பவர் தோனி. 45 வயதான நிலையிலும், சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். கெண்டைக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர், கடந்த சீசனில் ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதனால், அவர் எந்த நேரமும் ஓய்வை அறிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடக்கும் பிரீமியர் லீக்கில் தோனி விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எழுந்துள்ளது.
பெங்களூரூவில் நடந்த மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தோனி பங்கேற்றார். அப்போது, அடுத்த சீசனில் விளையாடுவீர்களா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் அளித்த பதில்; அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து இன்னும் நான் முடிவெடுக்கவில்லை. மருத்துவ பரிசோதனைகள், உடற் தகுதியைப் பொறுத்து டிசம்பர் மாதத்திற்குள் முடிவெடுப்பேன். நான் மீண்டும் விளையாடத் தகுதியோடு இருக்கிறேனா என்பதை மருத்துவர்கள் தான் பரிசோதித்து அறிக்கை தர வேண்டும். இந்த வின்டேஜ் வாகனத்தை சாலையில் ஓட வைக்கும் பொறுப்பு அவர்களிடம்தான் உள்ளது, என்று நகைச்சுவையாகப் பேசினார்.
He is very much hyped cricketer in the game, much more than his talent. Comparing with the great cricketers of the game he is nowhere in the list.
உடம்புக்கு முடியலனு தெரிது, அப்புறம் என்ன மருத்துவர் சொல்லனும்? பெரிமிதத்தோடு ஒதுங்கலாமே தோனி. 45 வயதிலும் ஏன் அப்படி உங்க உடம்ப இழுக்கனுமா?
எல்லா துறையிலும் கட்டுமரங்கள் நிறையவே இருக்கத்தான் செய்கிறார்கள்...
Why so much hype about his retirement?
அப்பாடா CSK விற்கு விடிவு காலம் நல்ல பிளேயர் தான் - அதற்காக ஒரு வயது இல்லையா? முடியவில்லை என்றால் விலகி நின்று மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்மேலும்
-
கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி
-
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
-
வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
-
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
-
பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு
-
படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்