69 அடியை எட்டிய பவானிசாகர் அணை
பு.புளியம்பட்டி:நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று, 69 அடியை எட்டியது.
பவானிசாகர்
அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2
லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவ தோடு, நகரங்கள்
முதல் கிராமங்கள் வரை குடிநீர் வினியோகமும் நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ளதால், கடந்த சில நாட்களாக நீலகிரி
மலைப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பவானி ஆறு மற்றும்
மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள்
உயர்ந்து வருகிறது. அணைக்கு நீர் வரத்து நேற்று காலை, 10 ஆயிரத்து, 65
கன அடியாக இருந்த நிலையில், நேற்று மாலை நீர் வரத்து வினாடிக்கு, 5,838
கன அடியாக இருந்தது.
அணை நீர்மட்டம், 67 அடியில் இருந்து, 69.15
அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 10.6 டி.எம்.சி.,யாக இருந்தது. மாவட்டம்
முழுவதும் மழை பெய்துள்ளதால், அணையில் இருந்து நீர் திறப்பு
முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால்,
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்தாண்டு இதே நாளில்
பவானிசாகர் அணை நீர்மட்டம், 102 அடி; நீர் இருப்பு, 30.3 டி.எம்.சி.,
யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'