மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் குழந்தை சுவாமிக்கு சித்தருக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
காலை சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து குழந்தை சுவாமி சித்தர் உற்சவர் மற்றும் மூலவருக்கு கலச அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சித்தரை வழிபட்டனர். அதுபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திரசுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'
-
ஏற்காடு மலை பாதையில் இரு வேறு இடங்களில் விழுந்த மரம், பாறை
Advertisement
Advertisement