அரிவாளுடன் 'ரீல்ஸ்' வீடியோ ராமநாதபுரத்தில் 4 வாலிபர்கள் கைது

ராமநாதபுரம்:

சமூக வலைதளத்தில் அரிவாள் மற்றும் பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த ரவுடி சுள்ளான் மதன், சமீபத்தில் வெட்டி கொல்லப்பட்டார். சமூக வலைதளத்தில் ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதையடுத்து அரிவாள், கத்தியுடன் சமூக வலை தளத்தில் வீடியோ வெளியிடுபவர்களை போலீசார் கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் சல்லிமலையை சேர்ந்த சேக் தாவூத் மகன் ஷாருக்கான் 21, பட்டாக்கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்டார். இதேபோல் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டி பெருமாள் மகன் பாலாஜி 22, கீழராமநதி சாகுல் ஹமீது மகன் செய்யது இப்ராஹிம் 19, காதர் சுல்தான் மகன் ஷேக் சிந்தாமிதார் 19, ஆகியோர் அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்டனர். இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் வெளியிட்ட அரிவாள் வீடியோவையும், கைதான பின் எடுக்கப்பட்ட மன்னிப்பு வீடியோவையும் ஒப்பிட்டு 'ரீல் மற்றும் ரியல்' என்ற தலைப்பில் போலீசார் அதை மீண்டும் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.

Advertisement