இந்தியா – ரஷ்யா வர்த்தகத்தை ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு
@block_B@
ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு
ரஷ்யாவுக்கான இந்திய துாதர் வினய் குமார் ரஷ்ய செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கடந்த, செப்., 12, 13ல் டில்லியில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் சந்தித்து இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
வரும் 2030க்குள் இருதரப்பு வர்த்தகத்தை, 10 லட்சம் கோடி ரூபாயாகவும், இரு நாடுகளுக்கிடையிலான முதலீட்டை, 5 லட்சம் கோடி ரூபாயாகவும் உயர்த்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கான ஒத்துழைப்பை அதிகரிக்க உரிய அமைச்சகங்களும் அரசு துறைகளும் நடவடிக்கை எடுக்க இரு தலைவர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.
ரஷ்யாவின் தேவைக்கு ஏற்ப திறமையான தொழிலாளர்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது. ரஷ்யாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் அனுமதியில் இந்தியர்கள் 25 முதல் 30 சதவீதம் வரை உள்ளனர்.
ரஷ்யத் தொழில் துறைகளுக்கு தேவையான பணியாளர்களைப் பயிற்றுவிக்க, இந்தியாவில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கவோ அல்லது ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவோ ரஷ்யாவுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.block_B
india We are the human producing company country.மேலும்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
-
'உணவு சந்ததை'யில் சாம்பார், குருமாவுக்கு 'மவுசு' இட்லி, சப்பா த்தியைவிட 'சை டிஷ்' விலை அதிகம்
-
சூதாடிய 8 பேர் கைது