பண்டமென்டல் அனாலிசிஸ் பிடியை தக்கவைக்குமா ‘பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்’?
ஒட்டும் பசை துறையில் முன்னணியில் உள்ள ‘பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் வரலாறு 1959ல் இருந்து தொடங்குகிறது. மர வியாபார அலுவலகத்தில் பியூனாக பணிபுரிந்த பல்வந்த்ராய் கல்யாண்ஜி பரேக், தச்சர்களை நேரில் சந்தித்து செயல்முறை விளக்கம் வாயிலாக விளம்பரம் செய்து நிறுவனத்தை வளர்த்தார். தற்போது இந்நிறுவனத்தை அதன் செயல் தலைவர் மதுகர் பரேக் வழிநடத்துகிறார். தலைமை செயல் அதிகாரியாக சுதன்சூவத்ஸ் இருக்கிறார். 1993ல் பட்டியலிடப்பட்ட பிடிலைட் நிறுவனம் இதுவரை சந்தை வாயிலாக நிதி திரட்டியதில்லை. சொந்த வருவாய், குறைந்த கடன் வாயிலாக வளர்ந்துள்ளது.
#போர்ட்போலியோ:
பிராண்டுகள் 30+
தயாரிப்புகள் 820
கிடங்குகள் 6200+
#தயாரிப்புகள்:
* ஒட்டும் பசை
* சீலன்ட்
* கட்டுமான ரசாயனங்கள்
* பெயின்ட் ரசாயனங்கள்
* மின்னணு ரசாயனங்கள்
* பிக்மென்ட்கள்
* கலை, கைவினை பொருட்கள்
#சந்தை ஆதிக்கம்:
பிராண்டுகளின் சந்தை பங்கு (%)
*பெவிக்கால் 60–65
*பெவிக்விக் 40
*எம்–சீல் 35
*அரால்டைட் 50
#வினியோக அமைப்பு
42,000 நகரங்கள்
5,700+ வினியோகஸ்தர்கள்
3.80 லட்சம் விற்பனையாளர்கள்
24,000 கிராமப்புற ‘பிடிலைட் கி துனியா’ மையங்கள்
[முதல் 10 வினியோகஸ்தர்களின் பங்கு, விற்பனையில் 3% மட்டுமே இருப்பதால், வினியோக குவிப்பு ரிஸ்க் இல்லை.]
#நிதியாண்டு செயல்பாடு
வருவாய் ரூ.14,601 கோடி (11.10%)
எபிட்டா ரூ.3,519 கோடி (24.10%)
நிகர லாபம் ரூ.2,471 கோடி (17.90%)
செயல்பாட்டு பணப்புழக்கம் ரூ.2,828 கோடி
(2025–26 நிதியாண்டில்)
[முக்கிய மூலப்பொருளான வினைல் அசிட்டேட் மோனோமரின் விலை இறங்கியது வருமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம்]
#வியூக மாற்றம்:
பாரம்பரிய முதன்மை தயாரிப்புகளில் இருந்து வளர்ந்து வரும் பொருட்களுக்கு கவனத்தை மாற்றி வருகிறது.
விற்பனை அளவில் ஒட்டும் பசைகளின் பங்கு (%)
2014–15 80
2024–25 52
[முதன்மை தயாரிப்புகளுக்கும், வேகமாக வளரும் கட்டுமான ரசாயனங்கள் மற்றும் பி2பி வணிகங்களுக்கும் இடையே 50:50 சமநிலையை எட்ட இலக்கு கொண்டுள்ளது.]
#வளர்ச்சி வாய்ப்பு
* நாட்டின் கட்டுமான ரசாயன சந்தை மதிப்பு 23,000 கோடி ரூபாயாக உள்ளது. இது 14 சதவீத கூட்டு வளர்ச்சியுடன் 2029ம் நிதியாண்டுக்குள் 33,000–35,000 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
* ரேரா சட்ட கட்டுப்பாடுகள் வாட்டர் புரூபிங்கை விருப்ப தேர்வில் இருந்து அத்தியாவசிய தேவையாக மாற்றியுள்ளன
* ராப் பிராண்டின் வர்த்தகத்தை 2031ம் நிதியாண்டுக்குள் 2,000 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
#புதிய பிரிவுகள்
* டீலர்களின் தேவைக்கு ஏற்ப ‘ஹைஷா’ என்ற பெயரில், உட்புற அலங்கார பெயின்ட் துறையில் பிடிலைட் இறங்கி உள்ளது
* ஸ்பெயின் நாட்டின் ‘குரூபோ பூமா’ கூட்டுடன் உருவாக்கப்பட்ட ‘யூனோபின்’ என்ற ஸ்ப்ரே வகை வாட்டர்ப்ரூப் பூச்சு, நிறுவனத்தின் முக்கிய கண்டுபிடிப்பு. இது பூச்சு, புட்டி, பிரைமர், பெயின்ட் ஆகிய 4 அடுக்குகளை ஒரே பொருளாக மாற்றுகிறது
* வரும் 2030ம் ஆண்டுக்குள் 10,000 கோடி ரூபாயாக வளரும் என எதிர்பார்க்கப்படும் மின்னணு பசைகள் சந்தையில் 500 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 900–1,000 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்ட இலக்கு வைத்துள்ளது.
#போட்டி
* மரப்பசை சந்தையில் ‘ஜோதி ரெசின்ஸ்’ மற்றும் ‘ஜூபிலன்ட்’ ஆகிய நிறுவனங்கள் டீலர்களுக்கு வழங்கும் தீவிர கடன் சலுகைகளால், பிடிலைட்டின் சந்தை பங்கு குறைந்துள்ளது
*‘ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக், எம்.ஒய்.கே., லேட்டிக்ரீட், சீகா, பாஸ்ராக், ராம்கோ’ ஆகிய நிறுவனங்கள் வாட்டர் புரூபிங், டைல் பசை சந்தைகளில் நுழைகின்றன
*ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம் மூலப்பொருள் உற்பத்தியில் 3,250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
#எதிர்கால கணிப்பு
* நடப்பு நிதியாண்டில் எபிட்டா லாப விகிதம் 20–24 சதவீத அளவை எட்டும் என்றும், இரட்டை இலக்க விற்பனை வளர்ச்சியை பதிவு செய்ய இலக்கு வைத்துள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது
* விலை ஏற்றத்துக்கு பிறகும், பிடிலைட் தனது விலை நிர்ணய அதிகாரத்தை தக்கவைத்து விற்பனையை பாதுகாக்குமா என்பது முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு
* பழைய தயாரிப்புகளின் வேகக்குறைவை, புதிய தயாரிப்புகள் ஈடுசெய்யுமா என்பதையும் சந்தை கவனிக்கிறது.
நிதிநிலை (ரூ.கோடியில்)
விபரம் : 2023–24 : 2024–25 : 2025–26
வருவாய் : 12,383 : 13,140 : 14,601
மொத்த லாபம் : 6,389 : 7,144 : 8,112
நிகர லாபம் : 1,747 : 2,096 : 2,471
செயல்பாட்டு பணப்புழக்கம் : 2,724 : 2,287 : 2,828
விகிதங்கள்
விபரம் : 2023–24 : 2024–25 : 2025–26
ஆர்.ஓ.சி.இ., (%) : 19.80 : 19.10 : 20.40
ஆர்.ஓ.என்.டபிள்யூ.,(%) : 20.30 : 21.10 : 22.40
டிவிடெண்டு ஆதாயம் (%) : 0.50 : 0.70 : 0.90
பி/இ (மடங்கு) : 88.70 : 69.80 : 53.40
மேலும்
-
பா.ஜ.,வின் சி பிளானில் ஒரு நடிகர்: சொல்கிறார் காங்., மாணிக்கம் தாகூர்
-
சரஸ்வதி தேவியின் ஆசியில் சாதனை படைத்த ஸ்வரஸ்ரீ
-
மதியம் முதல் தொடர்ந்து தட்டியெடுத்த மழை வெள்ளக்காடாக மாறிய தார் சாலைகள்
-
நல்ல காலம் பிறக்குது! குண்டும் குழியுமான சாலைகளுக்கு ரூ.75 கோடியில் சீரமைக்க திட்டம்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்